Actor Soori : நடிகர் சூரியின் பழைய புகைப்படம்..எப்படியிருக்காரு பாருங்க!

Actor Soori Old Photos : காமெடி நடிகராக இருந்த சூரி, சமீப சில ஆண்டுகளாக முக்கிய கதாப்பாத்திரங்களிலும் ஹீரோவகவும் நடித்து வருகிறார். இவரது பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Actor Soori Old Photos : வாழ்க்கை, ஒருவரை எப்படி மாற்றும் என்பதே தெரியாது. உதாரணத்திற்கு, பேருந்தில் நடத்துனராக இருந்தவர், பின்னர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக மாறலாம், பல ஆண்டுகளுக்கு முன்பு டீ விற்றுக்கொண்டிருந்தவர், பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆகலாம். அது போல, 20 வருடங்களுக்கு முன்பு துணை நடிகராக இருந்த இவர், இப்போது தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். இவரது கருடன் திரைப்படம் நேற்று வெளியானது (மே 31). இந்த படத்தில் இவர் பயங்கரமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், இவரது பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் சூரி. ஆரம்பத்தில் பெயர் குறிப்பிடப்படப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

2 /8

இவர், வென்னிலா கபடிக்குழு படத்தின் பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார்

3 /8

ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். 

4 /8

சூரி, விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். 

5 /8

இவரை ஹீரோவாக பார்க்க எப்படியிருக்கப்போகிறதோ என ரசிகர்கள் பயந்து கொண்டிருந்தனர். ஆனால், இவர் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

6 /8

சூரி, சமீபத்தில் கருடன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

7 /8

கருடன் படம், நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, சூரியின் நடிப்பிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

8 /8

சூரியின் பழைய புகைப்படங்கள் இதுதான்! எப்படியிருந்தவர் எப்படி ஆகியிருக்கார் பாருங்க..இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.