Amala Paul : அமலா பாலிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா இல்லையா? இதுவரை வெளியான தகவல்..

Amala Paul Twin Babies : பிரபல தென்னிந்திய நடிகை அமலா பாலிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையா?

Amala Paul Twin Babies : தமிழில் ‘மைனா’ படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால். கேரளாவை சேர்ந்த நடிகையான இவர், மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தலைவா படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் இவருக்கும் காதல் மலர, அந்த காதல் 2014ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. ஆனால், இந்த திருமணம்,2017ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இயக்குநர் விஜய், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள, அமலா பால் சில வருடங்கள் சிங்கிளாக இருந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அடுத்து, இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். இந்த நிலையில், இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

1 /8

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர், அமலா பால். 

2 /8

இவருக்கும் ஜகத் தேசாய்க்கும் கடந்த ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில், இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கல்யாணம் முடிந்த சில மாதங்களில் அறிவித்தனர். 

3 /8

அமலா பால், தனது கர்ப்ப கால புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வந்தார். 

4 /8

சமீபத்தில், அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியானது 

5 /8

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே பலர் இதை உண்மை என நம்ப ஆரம்பித்து விட்டனர். 

6 /8

அமலா பாலும், அவரது கணவர் ஜகத் தேசாயும் இன்ஸ்டாகிராம் தளத்தில் படு ஆக்டிவாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கங்களில் குழந்தை பிறந்து விட்டதா இல்லையா என்று போடாமல், வெவ்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

7 /8

அமலா பாலுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றும், இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

8 /8

இது குறித்து அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பேசினால்தான் உண்மை தெரிய வரும்.