ஜனவரி முதல் இந்த மாடல் சாம்சங் போன்களில் WhatsApp வேலை செய்யாது!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆப்பில் பல்வேறு அப்டேட்களை கொண்டு வரும் நிலையில், சில பழைய மாடல் போன்களில் அடுத்த ஆண்டில் இருந்து வாட்ஸ்அப் வேலை செய்து என்பதை தெரிவித்துள்ளது.

1 /6

தற்போது டிஜிட்டல் காலத்தில் தினசரி பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆப்பாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. அலுவலக வேலை முதல் சொந்த வேலை வரை அனைத்திற்கும் பயன்படுகிறது.

2 /6

வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இதனால் சில பழைய மாடல் போன்களில் இனி வாட்ஸ்அப் வேலை செய்யாது.

3 /6

பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் என சில மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அவர்கள் தங்கள் போன்களை மாற்ற வேண்டி இருக்கும்.  

4 /6

பின்வரும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு முதல் வேலை செய்யாது. எனவே இந்த மாடல் போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த மொபைலை மாற்ற வேண்டி இருக்கும்.

5 /6

இந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini, HTC One X, One X+, Desire 500, Desire 601 Sony Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V LG Optimus G, Nexus 4, G2 Mini, L90 Motorola Moto G, Razr HD, Moto E 2014

6 /6

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமின்றி ஐபோன் பயனர்களுக்கு இதே எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எனவே பழைய ஐபோனை இன்னும் பயன்படுத்தி வந்தால் அவற்றை மாற்றுவது நல்லது.