நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை நடிகை அஞ்சலி காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

1 /5

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி.  இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.    

2 /5

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற பல படங்களில் நடித்து இருந்தார் அஞ்சலி.  இதில் அங்காடி தெரு படம் நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.  

3 /5

தமிழ் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி.  மேலும் நடிகையாக மட்டுமின்றி ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாகவும் வளம் வந்தார். பிறகு தமிழ் படங்களை ஓரம் கட்டி விட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.  

4 /5

இந்த நிலையில் நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம் ஆக போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.  தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  

5 /5

தெலுங்கு மீடியாக்களில் வெளியான இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரவி உள்ளது.  இதனால் அஞ்சலியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.