கெட்ட கொலஸ்ட்ராலை ஓட ஓட விரட்ட இந்த சூப்பர் உணவுகளை சாப்பிட்டால் போதும்

Cholesterol Control Tips: இந்நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடலில் பலவித நோய்களும் ஏற்படுகின்றன.

Cholesterol Control Tips: உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இந்நாட்களில் துரித உணவுகளின் பழக்கமும் அதிகமாகியுள்ளது. தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவும் அதிகமாகி விடுகின்றது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /8

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விட்டால், அதை உடனடியாக குறைப்பது மிக அவசியமாகும். தினசரி உடற்பயிற்சி,  நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் இருக்கும். இவற்றைத் தவிர கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுக்கூடிய சில உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /8

பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, கொண்டைக்கடலை, ராஜ்மா ஆகியவை நமது செரிமான சக்தியை அதிகரித்து செரிமான செயல்பாடுகள் சீராக இருக்க உதவுகின்றன. இது கொலஸ்ட்ரால் பிரச்சனையை சரி செய்ய உதவுகின்றது.

3 /8

தினமும் 3-6 பாதாமை ஊற வைத்து உட்கொண்டால் கொலஸ்ட்ராலை குறைப்பதில் பெரிய அளவில் நன்மை கிடைக்கும். பாதாமில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

4 /8

பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க இவை உதவும்.

5 /8

பழங்களில் ஆரஞ்சு பழம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். ஆரஞ்சு சாறு குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

6 /8

புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள வேர்க்கடலை கொலஸ்ட்ராலை குறைக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினசரி குறைந்தபட்சம் 50 கிராம் வேர்கடலையை உட்கொள்வது கொழுப்பை கட்டுக்குள் வைக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

7 /8

கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு மிக உதவியாக இருக்கிறது. பூண்டில் பலவகை மூலிகை சத்துக்கள் இருக்கின்றன. பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு ரத்தக் கட்டிகள் உருவாவதையும் தவிர்க்கின்றது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு வாயுத்தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றது.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.