Janhvi Kapoor : சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்ற ஜான்வி கபூர்! வைரல் புகைப்படங்கள்..

Janhvi Kapoor : தமிழ், இந்தி படங்களில் மிகப்பெறிய நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர். இதில் ஜான்வி, தனது தாய்க்கு பிடித்த கோயிலுக்கு விசிட் செய்து போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். 

Janhvi Kapoor : இந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகளுள், மிகப்பெறிய இடத்தை பெற்றவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அவர், இந்தியில் அனில் கபூர், ஷாருக்கான் உள்பட பலருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர், 2018 ஆம் ஆண்டு துபாயில் உயிரிழந்தார். இவருக்கு 27 வயது நிரம்பிய ஜான்வி கபூர் என்ற மகளும், 23 வயது நிரம்பிய குஷி கபூர் என்ற மகளும் இருக்கின்றனர். இதில், ஜான்வி கபூர் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். சென்னைக்கு கொல்கத்தா-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையே நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை காண வந்த இவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல கோயிலுக்கு சென்றிருக்கிறார். 

1 /8

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், ஜான்வி கபூர். 

2 /8

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், தற்போது இந்தியில் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். 

3 /8

ராஜ்குமார் ராவ் உடன் இவர் இணைந்து நடிக்கும் படம், மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் மாஹி. இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் நடைப்பெற்று வருகிறார். 

4 /8

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைப்பெற்றது. இதை ஜான்வி கபூர் நேரில் கண்டு களித்தார். 

5 /8

நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் எளிதாக கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதை ஜான்வி கொண்டாடி மகிழ்ந்தார். 

6 /8

இவர் நடித்து வரும் Mr. & Mrs. Mahi திரைப்படமும் கிரிக்கெட் குறித்த கதைதான்.   

7 /8

சென்னை வந்திருக்கும் ஜான்வி, தனது தாய்க்கு பிடித்த முப்பாத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். 

8 /8

அவருடன், ஸ்ரீதேவியின் உறவ்னினர் முறை தங்கையும் நடிகையுமான மஹேஸ்வரி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.