லேபிள் வெப் சீரிஸ்க்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கம் புதிய படம்!

Vishnu Vishal: லால் சலாம் படத்திற்கு பிறகு விஷ்னு விஷால் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 

1 /5

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

2 /5

மேலும் விஷ்ணு விஷால் முக்கிய இயக்குனர்களுடன் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.  அடுத்ததாக அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  

3 /5

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.  இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  விஷ்னு விஷாலின் கரியரில் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

4 /5

மேலும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்திலும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.  இதுதவிர மோகன் தாஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.  

5 /5

பிரவீன் இயக்கத்தில் ஆர்யன், ராம்குமார் இயக்கத்தில் புதிய படம், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்ல அய்யாவு இயக்கத்தில் ஒரு படம் என்று அடுத்தடுத்து மாஸ் அப்டேட்களை வைத்துள்ளார்.