அகிலன் பட நாயகி தான்யா... இவரின் உண்மை பெயர் தெரியுமா?

நடிகை தான்யா ரவிசந்திரன் தற்போது வெளியாகியுள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

 

 

 

 

 

 

 

 

 

1 /7

பழம்பெரும் நடிகர் ரவிசந்திரனின் பேத்திதான், தான்யா எஸ். ரவிசந்திரன். 

2 /7

இவரை முதன்முதலில் மிஷ்கின் தனது படத்தில் நடிக்க வைப்பதற்காக தேர்வு செய்தார். ஆனால், அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. 

3 /7

மேலும், அவரது இயற்பெயர் அபிராமி. மிஷ்கின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பெயரை தான்யா என மாற்றிக்கொண்டார். 

4 /7

இவர் 2016இல் சசிகுமாருடன் நடித்து வெளியான பலே வெள்ளையத்தேவா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

5 /7

தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் 2017இல் பிருந்தாவன் படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

6 /7

கருப்பன், நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், தெலுங்கிலும் நடித்தார். இவர் கிருத்திகா உதயநிதியின் பேப்பர் ராக்கெட் வெப்-சீரிஸிலும் நடித்திருந்தார்.

7 /7

கடந்த வாரம் வெளியான அகிலன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்தில் 48 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.