ஏர்டெல் வெளியிட்டுள்ள 2 புதிய "Data add-on plans" - முழு விவரம் இதோ!!

ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியா தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

  • Jan 22, 2021, 08:57 AM IST

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 என்கிற விலையில் இரண்டு டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் டேட்டா திட்டங்களைப் போலவே, இந்த இரண்டு புதிய திட்டங்களும் விங்க் பிரீமியம் சந்தாவுடன் தொகுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 /6

குறிப்பாக டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் ரீசார்ஜ்களாக ஏர்டெல் இந்த இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் இதில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏர்டெல் ரூ.78 பேக் ஆனது 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ரூ.248 திட்டம் ஆனது 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 /6

ஏர்டெல் பயனர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த புதிய திட்டங்கள் எதாவது ஒரு ஆக்டிவ் ரீசார்ஜ்க்கும் மேல் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். ஆக்டிவ் பேக் அல்லது ஸ்மார்ட் பேக்குகளைக் கொண்ட எந்தவொரு பயனருமே இந்த விங்க் பிரீமியம் டேட்டாத் திட்டங்களுக்கு தகுதியுடையவர்கள் என்றும் ஏர்டெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

3 /6

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு திட்டங்களும் அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதேபோல் இந்த திட்டங்களை நிறுவனத்தின் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

4 /6

ஏர்டெல் வழங்கும் ரூ.78 டேட்டா பேக் ஆனது 5GB அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இதன் செல்லுபடியாகும் காலம்(வேலிடிட்டி) உங்களிடம் இருக்கும் ஆக்டிவ் பிளானிங் செல்லுபடியாகும் காலத்துடன் ஒற்றுப்போகும். முன்பு கூறியபடி ஏர்டெல் ரூ.78 மற்றும் ரூ.248 ஆகிய இரண்டு திட்டங்களும் வெறும் டேட்டா பேக்குகள் மட்டுமே ஆகும். 

5 /6

இது ஆக்டிவ் ஆக இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்ட பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் விங்க் பிரீமியம் சந்தா நன்மை கிடைக்கும். ஆனால் விங்க் பிரீமியம் சந்தாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.

6 /6

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.248 டேட்டா பேக் ஆனது 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் விங்க் பிரீமியம் சந்தா நன்மையை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. விங்க் பிரீமியம் பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த விங்க் பிரீமியம் அல்லது விங்க் மியூசிக் பிரீமியம் என்பது பாரதி ஏர்டெல்-இன் ம்யூசிக் சர்வீஸ் ஆகும். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஏர்டெல் அல்லாத பயனர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.