கொலஸ்ட்ரால் முதல் எடை இழப்பு வரை... வியக்க வைக்கும் மாங்கனி!

உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை மாங்கனி என்று கூறப்படுவதுண்டு. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்க வல்ல கனியான மாம்பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

உலக மக்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட பெருங்கொடை மாங்கனி என்று கூறப்படுவதுண்டு. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்க வல்ல கனியான மாம்பழத்தில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

1 /7

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கும். மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு.

2 /7

மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

3 /7

மாம்பழத்திலிருக்கும் 'பெக்டின்' இரத்தக் குழாயில் கொழுப்புத் திட்டுக்கள் படிவதைத் தடுக்கும்.  ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் கரைக்கிறது. இதனால் உடல் எடையும் குறையும்.

4 /7

சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு.  

5 /7

மாம்பழத்திலிருக்கும் 'மாங்கிஃபெரின்' எனும் பொருள், வயிறு, குடல் ஆகிய உடற்பாகங்களில் வரக்கூடிய புற்று நோயைத் தடுக்கும் திறன் பெற்றது

6 /7

மாம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும்.  

7 /7

மாங்கனியைக் கடித்துச் சுவைக்கும் போது சுரக்கும் அதிகமான, உமிழ்நீர் செரிமானத்தைத் தூண்டும். இதிலிருக்கும் நார்ச்சத்து மலச் சிக்கலுக்குத் தீர்வாகும்.