காஸ்ட்லி ஐபோன் வேலை செய்யவில்லையா? இந்த 4 எழுத்து டைப் செய்தா ஜோலி முடிஞ்சிடும்! ஜாக்கிரதை!

Apple iPhone bugs Alert : ஐபோன் உபயோகிப்பவரா நீங்கள்? எச்சரிக்கை உங்களுக்குத் தான்... போனில் 4 எழுத்துகளை தட்டச்சு செய்தால், உங்களுக்கு பெரிய பிரச்சனை வரலாம். ஆராய்ச்சி வெளிப்படுத்தும் ஆச்சரியமான உண்மை...

 

ஆப்பிள் ஐபோன்கள் செயலிழந்துவிட்டதாக செய்திகள் வருவது தற்போது அதிகம் நிகழ்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய ஐபோன் எப்படி செயலிழந்து போகும் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஏன், எதற்கு எப்படி என்று தெரிந்துக் கொள்ளுங்கள்...  

1 /8

ஐபோனில் சில சிறப்பு எழுத்துக்களை டைப் செய்தால், போன் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்று தெரியவந்துள்ளது. இதற்கு மிகப்பெரிய காரணம் ஒரு பிழை என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஒரு ஆராய்ச்சியில் அவதானித்துள்ளனர் 

2 /8

ஐபோனில் 4 எழுத்துக்களைத் தட்டச்சு செய்தால் பிரச்சனை வரும் என்று தெரிந்துவிட்ட நிலையில், அவற்றை பயன்படுத்தவே வேண்டாம். தவறியும் இந்த 4 எழுத்துக்களை டைப் செய்துவிட்டால், ஐபோன் செயலிழக்கக்கூடும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 

3 /8

iPhone பயனர்கள் தங்கள் சாதனத்தில் இரண்டு மேற்கோள் குறிகளுடன் (“”::) மற்றும் கோலன் எனப்படும் இரு புள்ளிகளைக் கொண்ட எழுத்தை தட்டச்சு செய்தால், போனில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.  

4 /8

 (""::)) என்பது ஸ்பிரிங்போர்டு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எழுத்துக்களை டைப் செய்தால் போன் செயலிழந்துவிடுகிறது...   

5 /8

இந்த ஆராய்ச்சியில், தங்களுடைய ஐபோனின் செட்டிங்ஸ் பிரிவில் டைப் செய்தபோதும்,  ஐபோன் செயலிழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

6 /8

இந்த பிழை குறித்து ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், பிழையை ​​நிறுவனம் சரி செய்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

7 /8

வரவிருக்கும் iOS புதுப்பிப்புக்குப் பிறகு, இந்த எழுத்துப் பிழை பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது  

8 /8

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது