விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கண்ணன் 8வது பிள்ளை! மனைவிகளும் 8! 8க்கும் கண்ணனுக்கும் என்ன தொடர்பு?

Krishna jayanthi Celebrations : விஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ கிருஷ்ணர், மதுராவின் இளவரசி தேவகி மற்றும் அவரது கணவர் வசுதேவரின் எட்டாவது குழந்தையாக பிறந்து, கோகுலத்தில் நந்தகோபர்-யசோதாவின் மகனாக வளர்ந்தவர்....  

பிறப்பதற்கு முன்னரே எதிரியை சம்பாதித்த பெருமையும் கிருஷ்ணருக்கே உண்டு. தாய்மாமன் கம்சன், கிருஷ்ணரை கொல்வதற்காக செய்த சதிகளை முறியடித்த கண்ணனின் பிறப்பை உலகமே விமரிசையாக கொண்டாடுகிறது...

1 /9

மதுராவில் பிறந்த குழந்தை வளர்ந்ததோ ஆயர்பாடியில்... மதுராவின் மைந்தனின் மண் பட்டு மகிழ்ந்தது பிருந்தாவன பூமி

2 /9

ஆவினங்களை மேய்க்கும் இனத்தில் வளர்ந்த கண்ணனுக்கு பிடித்தமானது வெண்ணெய்... வெண்ணெயை திருடித் தின்பதில் இருந்த சுகத்தால், கண்ணனுக்கு வெண்ணெய்த் திருடன் என்ற பெயரே உண்டு

3 /9

ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன், சுட்டியும் குறும்பும் செய்வதில் சமர்த்தன். சாமர்த்தியமாய் பிறரை ஏமாற்றுவதிலும் வல்லவராம் கிருஷ்ணர்

4 /9

கண்ணன் என்றாலே, ஆவினங்கள், பால், வெண்ணெய், ஆயர்பாடி, புல்லாங்குழல் இசை என பல விஷயங்கள் கண் முன் தோன்றும்

5 /9

கண்ணனின் வாழ்க்கையில் அவர் செய்யாத மாயங்களே இல்லை என்பதால், மாயக் கண்ணன் என்ற பெயரும் அவருக்கு உண்டு. மாயக் கண்ணனின் உபதேசங்களில் மிகவும் முக்கியமானது அர்ஜூனனின் தேரோட்டியாக மாறி, உலகிற்கு கண்ணன் உபதேசித்த பகவத்கீதை

6 /9

வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்பதையும் இசையின் மகத்துவத்தையும் சொல்லிக் கொடுத்த தெய்வர் கண்ணன்

7 /9

கண்ணனின் புல்லாங்குழலில் இருந்து எழும் தேவகானத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது

8 /9

ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் பகவான் கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக விரதம் அனுசரித்து பூஜைகள் செய்வது வழக்கம். ஜென்மாஷ்டமி அன்று உறியடி விழா நடைபெறுவது வழக்கம்

9 /9

உணவுப்பிரியரான கண்ணனுக்கு பிடித்த பட்சணங்களை செய்து கோகுலாஷ்டமியன்று படைபப்து வழக்கம்