உங்கள் வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம் ப்ளீஸ்

self-motivation : வாழ்க்கையை நினைத்து கவலைப்படும் முன் இங்கே ஒரு நிமிடம் செலவழியுங்கள்

 

self-motivation : உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நினைத்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இங்கே ஒரு நிமிடம் செலவழித்த பிறகு கவலைப்படுங்கள்

1 /9

உங்களுக்கு இப்போது இருக்கும் பெரிய பிரச்சனை சமாளிப்பது எப்படி என்பதற்கான வழியை தேடிக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் அந்த வழியை கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 

2 /9

இதனால் வரும் கவலை உங்களையும், குடும்பத்தையும் நாளுக்கு நாள் அழுத்திக் கொண்டே இருக்கிறது. யாரும் உதவ வரவில்லை என நினைக்கிறீர்கள். உண்மை தான். யாரும் உதவ வரவே மாட்டார்கள். 

3 /9

நீங்களும், உங்களிடம் இருக்கும் இரண்டு கைகளும் தான் உங்களை தாங்கிப் பிடித்துக் கொள்ள இப்போதைக்கு இருக்கும் இரண்டு கரங்கள். வேறொரு கரம் எதிர்பார்த்தாலும் வராது. 

4 /9

முடிந்தளவுக்கு  கவலைப்படுங்கள். கவலைப்பட்டு, நொந்து உங்களை வருத்திக் கொள்ளுங்கள். அதனால், மிஞ்சப்போவது ஏதும் இல்லை. கடைசியில் இருக்கும் உயிரும் போகத்தான் போகிறது. இல்லையா?  

5 /9

அப்படியென்றால் போகப்போகிற உயிர் நொந்து, வருத்தப்பட்டு ஏன் போக வேண்டும்?. உங்களுக்குள் இருக்கும் கவலைகளை எதிர்த்து தீரமாக போராடி ஒரு வீரனைப்போல் சண்டை செய்து போகட்டுமே. 

6 /9

கவலைப்படுவதை நிறுத்துங்கள். இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. அதில் பூமியே ஒரு தூசு போன்றது. அதில் நீங்களும் நானும் எவ்வளவு என்று யோசித்துப் பாருங்கள். ஒரு பிறவி, ஒரு இறப்பு தான். அதனால் நன்றாக வாழ்துவிட்டு செல்லுங்கள். 

7 /9

நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த நொடியில் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஆயிரக்கணக்கான மக்கள், பிஞ்சு குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் குண்டு மழைக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கை கால்களை இழந்தும் நிரந்தர மாற்று திறன்மிக்கவர்களாக்கப்படுகின்றனர். குடும்பம் ஒன்று பலருக்கு இருக்கவில்லை. அப்பா யார், அம்மா யார் என தெரியாதவர்கள் இந்த உலகில் கோடிக்கணக்கானவர்கள்  

8 /9

இதைவிடவா உங்களுக்கு பெரிய பிரச்சனை இருந்துவிட போகிறது. நிச்சயமாக இருக்க வாய்ப்பே இல்லை, கடனுக்காக கவலைப்படுகிறீர்கள் என்றால், அதனை உங்களால் திருப்பி செலுத்த முடியும். கொஞ்ச காலம் தான் தேவைப்படும். 

9 /9

அதுவரை உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றி நினைக்காமல் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்ள கவனம் செலுத்துங்கள். அந்த காலம் எதுவென்பதையும் நீங்கள் தான் தீர்மானியுங்கள். ஒரு சில 5 ஆண்டுகளில் நீங்கள் வெற்றி பெற்றவராக வளர்ந்து இருப்பீர்கள். கவலைபட்ட காலம் எல்லாம் இப்போது உங்களுக்கு நினைவில் நீங்கா வடுவாக இருக்கும். மற்றபடி நீங்கள் மகிழ்ச்சியான மனிதனாக மாறியிருப்பீர்கள். அப்படியான வாழ்க்கை வரும் என உறுதியாக நம்புங்கள். இந்த உலகமே நம்பிக்கையில் தான் சுழல்கிறது.