Audi RS 5 Sportback: இந்தியாவில் அட்டகாச அறிமுகம், விலை பிற விவரங்கள் இதோ

Audi RS 5 Sportback: பிரீமியம் மற்றும் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இன்று இந்தியாவில் புதிய கார் ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் (Audi RS 5 Sportback) மாடலை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் (Audi launches 1.04 crore car in India) என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, ஆடி இந்தியா இன்று இந்த தகவலை அளித்துள்ளது.

ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லன் கூறுகையில், ஆடியின் அனைத்து 'ஸ்போர்ட் மாடல்களுக்கும்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

1 /5

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடியின் புதிய கார் ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் மாடல், இந்தியாவில் ரூ .1.04 கோடியில், (எக்ஸ்-ஷோரூம் விலை) தொடங்குகிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளம்)  

2 /5

ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக்கில் 2.9L V6 twin-turbo petrol engine உள்ளது. இது 450HP பவரை உருவாக்குகிறது. இது முழுமையாக முடிக்கப்பட்ட யூனிட்டாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

3 /5

காரின் அறிமுகம் குறித்து ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “ஆடி ஆர்எஸ் 5 முதன்முறையாக இந்தியாவிற்கு ஸ்போர்ட் பேக்காக வருகிறது. அன்றாட தேவைகளுக்கு அப்பாற்பட்ட பணிகளுக்காக ஆடி ஏஸ்-ஐ பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்” என அவர் கூறினார். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

4 /5

ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் 0 முதல் 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது என்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.  (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளம்)

5 /5

இந்த காரை வாங்குவதற்கு முன் நீங்களே அதை ஓட்டிப் பார்க்க விரும்பினால், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.audi.in/ இல் ஆன்லைன் டெஸ்ட் டிரைவ் முன்பதிவு செய்யலாம். (புகைப்படம் - அதிகாரப்பூர்வ வலைத்தளம்)