Axiom-2: விண்வெளிப் பயணம் வெற்றி! பூமிக்கு திரும்பிய ஆக்ஸியம்-2 குழுவினர்

Axiom 2 crew returns: இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.

விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வந்த SpaceX Crew Dragon காப்ஸ்யூல், 12 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.

1 /7

விண்வெளிக்கு சென்ற முதல் அரேபிய பெண் விண்வெளி வீராங்கனை ராயன்னா பர்னாவி மே 21, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஆக்ஸியம் ஸ்பேஸின் இரண்டாவது திட்டத்தில் விண்வெளிக்குச் சென்ற முதல் அரபு பெண்மணி  ராயன்னா பர்னாவி (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

2 /7

பெண்கள் வழி நடத்துகிறார்கள் ஆக்ஸியம் 2 குழுவினருக்கு நாசாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமை தாங்கினார். 10 விண்வெளி நடைப்பயணங்கள் உட்பட ISS க்கு மூன்று நீண்ட கால பயணங்களில் 665 நாட்கள் சுற்றுப்பாதையில் அதிக நேரம் செலவழித்த அமெரிக்க சாதனையை அவர் தற்போது பெற்றுள்ளார். தற்போது, அவர் ஆக்சியோமின் மனித விண்வெளிப் பயணத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

3 /7

Axiom என்பது NASA இன் முன்னாள் ISS திட்ட மேலாளரின் தலைமையில் ஹூஸ்டனை தளமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

4 /7

குழுவினரின் வருகையானது இரண்டாவது விண்வெளி நிலைய பணியை நிறைவு செய்தது. 

5 /7

34 வயதான பயோமெடிக்கல் விஞ்ஞானி பர்னாவி ISS இல் 10 நாட்கள் சுற்றுப்பாதையில் திட்டமிடப்பட்ட போது, ஸ்டெம் செல் மற்றும் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மைக்ரோ கிராவிட்டியில் மனித நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அழற்சி தொடர்பாக அவர் அவதானிப்புகளை மேற்கொண்டார்  

6 /7

இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.

7 /7

SpaceX Crew Dragon காப்ஸ்யூல், 12 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.