See Pics: அயோத்தியின் அரண்மனை போன்று அமையவிருக்கும் அயோத்தி ரயில் நிலையம்!!

அயோத்தியில் ராமர் கோயில் வடிவில் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..!
  • Aug 04, 2020, 19:45 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் வடிவில் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..!

1 /7

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். 

2 /7

இந்நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவத்திற்கு மாற்றியமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

3 /7

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மாற்றியமைக்க ரயில்வே பட்ஜெட்டில், ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.104 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

4 /7

அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றியமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். 

5 /7

இதற்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலைய முதற்கட்ட மறுசீரமைப்பு பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

6 /7

ரயில் நிலைய வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை சரிசெய்தல், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், காத்திருப்பு அறைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆண்கள் தங்குமிடம், 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் ஆகியவை கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 /7