அயோத்தி ஸ்ரீ ராமர் அவதரித்த புண்ணிய பூமி. அயோத்தி நகரம், சரயு நதியின் கரையில் வளர்ந்து செழித்தோங்கிய நகரம். ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள நகரம்.
அன்று, 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, ராமர் திரும்பியபோது, அயோத்தி அலங்கரிக்கப்பட்டது. இன்றும் அவ்வாறே, அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலரது நீண்ட நாள் கனவு, ராமர் கோயிலின் கடுமானம். அதன் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளில் அயோத்தி பூலோக சொர்க்கமாய் ஜொலிக்கிறது!!
ஸ்ரீ ராமர் அயோத்தி நகரில்தான் பிறந்தார். இதன் முற்றங்களில் ஸ்ரீராமர், அவரது சகோதரர்களான இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் துள்ளிக் குதித்து விளையாடியுள்ளார். இங்குதான் அவரது இளமைப் பருவமும் கழிந்தது.
பல வம்சங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இந்நகரம் சாட்சி. பல கலாச்சாரங்கள் இங்கே தோன்றியுள்ளன.
ராமர் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் இக்கோயிலுக்குச் சென்று ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கே தன் அன்னை அஞ்சனையின் மடியில் குழந்தை அனுமன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
இந்த பிரம்மாண்டமான வளாகம் ஒரு கோயிலாகவும் வழிபடப்படுகிறது. புராணங்களின் படி, ராமர் சீதையை மண முடித்து அயோதிக்கு அழைத்து வந்த பிறகு கைகேயி இந்த இடத்தை சீதைக்கு திருமண பரிசாக வழங்கினார்.
அயோத்திக்கு வரும் ராம பக்தர்களுக்கு அயோத்தியின் மண்ணை மிதிக்கும் போதே ராம பக்தியில் திளைக்கும் வாய்ப்பை தரும் வகையில், இங்குள்ள ரயில் நிலைய கட்டிட கட்டமைப்புகள் ராமர் கோயிலைப் போலவே கட்டப்படவுள்ளன.