சிறுநீரக கல் ஆபத்து... தடுக்க உதவும் ஆயுர்வேத பானங்கள்

சிறுநீரக கற்களின் வலி விவரிக்க முடியாதது. இந்த பிரச்சனை பல காரணங்களுக்காக ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் சில தீர்வுகள் உள்ளன. அவற்றை பற்றிப் பார்ப்போம்.

கிட்னி ஸ்டோன் அளவு சிறியதாக இருக்கும் போது பாதிப்பை உணராமல் இருக்கலாம். அதிக வலியை உண்டு செய்யும் இந்த கற்கள் வெளியேற ஆயுர்வேதம் சொல்லும் வைத்தியம் என்ன என்பதை பார்க்கலாம்.

1 /5

ஆப்பிள் சைடர் வினிகர் நமது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை பெரிதும் உதவுகிறது. இதில் சிட்ரிக், அசிட்டிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன. இது நம் உடலில் சேரும் நச்சுக்களை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது.  

2 /5

கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. இது தவிர, நமது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன. சிறுநீரக கற்கள் இருந்தாலும் கொத்தமல்லி சாறு தயாரித்து தினமும் அருந்தலாம். இதன் மூலம் சிறுநீரக கற்களை (Kidney Stone) விரைவில் அகற்றலாம்.  

3 /5

தக்காளியில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும். சிறுநீரக கற்கள் இருந்தால், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.

4 /5

ஆயுர்வேதத்தில் துளசி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. துளசியில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவும். துளசி இலைகளின் சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5 /5

வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரமாக எலுமிச்சை கருதப்படுகிறது. எலுமிச்சையின் உள்ளே சிட்ரிக் அமிலம் உள்ளது. சிறுநீரக கற்களில் எலுமிச்சை சாற்றை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.