200க்கு மேல சுகர் போனாலும் இனி டென்ஷன் இல்லை.. இந்த ஜூஸ்கள் தான் சிறந்த டானிக்

Ayurvedic Juice To Control Diabetes: இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து சுகர் நோயாளிகள் விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 ஆயுர்வேத பானங்களை குடிக்கலாம். இது கடுமையான வெப்பத்திலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

வெயில் காலத்தில் சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீரிழிவு நோயை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். ஆனால் மருந்துகளோடு சில மூலிகைகளையும் உணவில் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க செய்யும். அப்படியான மூலிகை பானங்கள் என்ன என்பதை தான் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ள போகிறோம்.

 

1 /7

சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். கோடைக் காலத்தில், சர்க்கரை நோயாளிகளின் உடல்நிலை வெப்பத்தின் காரணமாக மோசமாகிவிடும்.

2 /7

வெந்தய விதை: வெந்தய விதை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

3 /7

பாகற்காய்: பாகற்காய் சாறு பாரம்பரியமாக இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் பானமாகும். ஒரு பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறிய குவளையில் குடிக்கவும். பாகற்காயில் காணப்படும் சரண்டைன் மற்றும் பாலிபெப்டைட் கலவைகள் இன்சுலின் போன்று செயல்பட்டு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

4 /7

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை தேநீர் இரத்த சர்க்கரையை குறைக்க ஒரு பயனுள்ள ஆயுர்வேத பானமாகும். ஒரு முழு இலவங்கப்பட்டையை எடுத்து தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தினமும் குடிக்கவும். இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் செரிமான அமைப்பில் கார்போஹைட்ரேட்டுகளின் முறிவை குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

5 /7

மஞ்சள் பால்: மஞ்சள் பால் மிகவும் பிரபலமான பானங்களின் ஒன்றாகும். மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் பாலின் நன்மைகளையும் ஒருங்கிணைக்கிறது. எனவே இந்த பானத்தை தயாரிக்க ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து தூங்கும் முன் குடிக்கவும்.

6 /7

நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது, இது கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் உடலை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் அளிக்கிறது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.