ஆரோக்கியம் தரும் பப்பாளி பழத்தின் நன்மைகள்

பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. பப்பாளி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. எனவே இந்த தொகுப்பில் நாம் ஆரோக்கியம் தரும் பப்பாளி பழத்தின் நன்மைகள் என்னவென்று பார்போம்.

1 /4

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.

2 /4

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். 

3 /4

மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.  

4 /4

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.