வரி விலக்குடன் அசத்தலான வட்டி... டபுள் பலன்களை தரும் ‘சில’ முதலீடுகள்!

மத்திய அரசின் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் லாபத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி சேமிப்பு பலன்களையும் வழங்குகிறது. 

நீங்கள் வரி செலுத்துபவராக இருந்து, வருமானத்துடன் வரியைச் சேமிக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள திட்டங்கள் உங்களுக்கானவை. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வரியைச் சேமிக்கலாம்.

 

1 /6

வருமான வரியைச் சேமிக்க, பல முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு உதவும். அதற்கு சிறுசேமிப்பு திட்டங்கள் மிகவும் ஏற்றவை. அதனுடம், வருடத்திற்கு ஒரு முறை செய்யும் முதலீட்டு திட்டங்களும் சிறந்த வருமானத்துடன், வரி விலக்கும் கிடைக்கும். இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

2 /6

சிறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகம் மூலம் திறந்து வரிவிலக்கின் பலனை பெறலாம். சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ், குறுகிய காலத்திலிருந்து நீண்ட கால வரை செய்யப்படும் சிறந்த முதலீடுகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), கால வைப்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி (SSY) போன்ற பல திட்டங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. வரிச் சேமிப்பிற்காக EPF போன்ற திட்டமும் உள்ளது.  

3 /6

மகிளா சம்மான் சேமிப்பு  திட்டத்தின் கீழ், பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை துவங்கலாம்.. வயது வரம்பு எதுவும் கிடையாது. 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு ஆண்டுகளில் முதலீட்டுக்கு 7.5 சதவீதம் என்ற நிலையான வட்டி வழங்கப்படும். இதன் மூலம் வருமான வரி விலக்கின் நன்மையை பெறலாம்,

4 /6

PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம். பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது சிறு சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டமாகும். இதில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் சேமிக்க முடியும்.

5 /6

பெண் குழந்தைகள் பெயரில் சுகன்யா சம்ரித்தி திட்டம் என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய் வரியைச் சேமிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், மகளுக்கு 18 வயதாகும் போது முதலீடு செய்த தொகையில் பாதியையும், 21 வயதாகும் போது முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வட்டி 8 சதவீதம் ஆகும்.  

6 /6

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்கின் கீழ், ஒரு ஊழியர் ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் PF கணக்கில் உங்களை பணியமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது அமைப்பு அதே அளவில் கணக்கில் பங்களிப்பு செய்யும். இந்தத் திட்டமும் வரிச் சேமிப்பின் கீழ் வருகிறது, இதில் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.