தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு.. கோடிகளுக்கு அதிபதியா லெஜண்ட் சரவணன்

Actor Legend Saravanan Net Worth: லெஜண்ட் சரவணன் அருளின் முதல் திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்திற்கு பிறகு தற்போது கருடன் பட இயக்குனர் துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார். இதனிடையே லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Actor Legend Saravanan Net Worth: ‘லெஜண்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான தொழிலதிபர், லெஜண்ட் சரவணன். இவர், தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவர். தனது துணிக்கடையின் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு திடீரென படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

1 /8

சரவணா செல்வரத்தினம் கடையின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன். இவரது உண்மையான படம், சரவண அருள். இவர்நடித்திருந்த லெஜண்ட் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இவர் விளம்பர படங்களில் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் எப்படி ரசித்தார்களோ, படத்தையும் அதே போல சிரித்து ரசித்தனர்.   

2 /8

லெஜண்ட் படத்தில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள். பாடல்களும் கேட்கும் ரகத்தில் இருந்தது. ஜேடி-ஜெர்ரி இப்படத்தை இயக்கினர். இதில் ஊர்வசி ரவுடேலா, விவேக், யோகி பாபு, சுமன், நாசர் மற்றும் விஜய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.   

3 /8

சென்னையில் பிறந்து வளர்ந்த சரவணனுக்கு தற்போது 53 வயதாகிறது. இவர், நடிக்க வருவதற்கு முன்பு மக்கள் நலனுக்காக சில சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.   

4 /8

லெஜண்ட்  திரைப்படம், இவரை தமிழ் ரசிகர்களை தாண்டி தெலுங்கு திரையுலகம் வரை அறிய வைத்தது. இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   

5 /8

தற்போது இவர் எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ் மற்றும் அண்மையில் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன் பட இயக்குனருடன் 2வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.   

6 /8

நடிகரும் தொழிலதிபருமான லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6000 கோடி என சொல்லப்படுகிறது. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2,495 கோடி ரூபாய் வருவாய் தருகிறதாம்.   

7 /8

இவரிடம்  Rolls Royce G host ரூ. 8 கோடி, Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி, Rolls Royce Wraith- ரூ. 5 கோடி, Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி, Rolls Royce Phantom- ரூ. 10 கோடி உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான பல கார்களை சொந்தமாக வைத்துள்ளாராம்.  

8 /8

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் சொந்தமாக பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடங்களுடன் பிரமாண்டமான துணி கடை மற்றும் நகைக் கடை வைத்துள்ளார்.