100 யூனிட் இனி இலவசம் இல்லையா...? அரசு பரபரப்பு விளக்கம்

TANGEDCO Explanation On Free Electricity: சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

  • May 17, 2024, 20:13 PM IST

தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது.  


 

 

1 /7

சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் (100 Unit Free Electricity) குறித்து வெளியான செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது என தெரிவித்துள்ளது.   

2 /7

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை என TANGEDCO தெரிவித்துள்ளது.  

3 /7

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது. 

4 /7

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என TANGEDCO அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.   

5 /7

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.   

6 /7

இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.   

7 /7

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது.