கேகேஆர்

  • Oct 12, 2024, 21:57 PM IST
1 /8

வங்கதேசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி இன்று (அக். 12) ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.   

2 /8

இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

3 /8

சம்பிரதாயமாக நடைபெறுவதால் இந்திய அணி பிளேயிங் லெவனில் பல மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் ரவி பிஷ்னோய் விளையாடுகிறார்.   

4 /8

இந்திய அணியில் இந்த தொடரில் நிச்சயம் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட் ஹர்ஷித் ராணா இதிலும் விளையாடவில்லை.   

5 /8

இதன்மூலம், அவர் இந்திய அணிக்கு எந்த பார்மட்களிலும் அறிமுகமாகாத நிலையில், Uncapped வீரராகவே நீடிக்கிறார்.  

6 /8

அந்த வகையில், கொல்கத்தா அணி அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு வெறும் ரூ.4 கோடி கொடுத்து Uncapped வீரராகவே தக்கவைத்துக்கொள்ளலாம்.   

7 /8

அக். 31ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். தக்கவைக்கும் 6 வீரர்களில் நிச்சயம் ஒரு Uncapped வீரரை எடுக்க வேண்டும்.   

8 /8

ஏலத்திற்கு முன் தக்கவைத்தால் ரூ. 4 கோடி ஒதுக்க வேண்டும். அந்த வகையில் தற்போது கேகேஆர் ஹர்ஷித் ராணாவையும், ஆர்சிபி யாஷ் தயாளையும் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ரெட்டி விளையாடிவிட்டதால் அவரை எஸ்ஆர்ஹெச் அணியால் தக்கவைக்க இயலாது.