புதன் பெயர்ச்சியால் இன்றிலிருந்து அடுத்த ஒரு மாதம் ஓஹோன்னு இருக்கும்! ஆனா இந்த பரிகாரத்த செஞ்சிடுங்கோ!

Mercury Transit In Libra: இன்று அக்டோபர் 10, 2024 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு மாறினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்... 

இன்று முதல் அறிவாய் பேசப் போகும் ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா? துலாமில் புதன் சஞ்சாரம் யாருக்கு எப்படி இருக்கும்? விரிவாக அறிந்து கொள்வோம்...

1 /10

அறிவுக்காரகர் எனப்படும் புதன், இன்று காலை தனது சொந்த ராசியான கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார். இந்த பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள் மற்றும் அதற்கான பரிகாரங்களை தெரிந்துக் கொள்வோம்...  

2 /10

மகர ராசியினருக்கு தற்போது போதாத காலம், மனதில் சுமைகள் அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உணவு கட்டுப்பாடு அவசியம்

3 /10

சொந்த ராசியில் இருந்து விலகிய புதனின் தாக்கம், கன்னியில் எதிர்மறையாக இருக்கும். கன்னி ராசியினரின் சேமிப்பு கரையும், அநாவசிய செலவுகள் ஏற்படும், பேச்சுவார்த்தை தகராறில் முடியும் என்பதால் வாயடக்கம் அவசியம்

4 /10

ரிஷப ராசியினருக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கம் மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பின்னடைவும், உறவுகளிடம் வருத்தம் என மனதில் குழப்பங்களும் கவலைகளும் அதிகரிக்கும்

5 /10

துலாமிற்கு மாறிய புதன் பெயச்சியால் பிரச்சனைகளை சந்திக்கும் ராசியினர், நவராத்திரி நாயகிகளை வணங்கி அருள் பெற்றால் கவலைகளை எதிர்கொள்ளும் பக்குவம் கிடைக்கும்

6 /10

இன்று அஷ்டமியில் புதன் துலாம் ராசிக்கு மாறினார், துர்காஷ்டமி நாளான இன்றும், நவமி நாளான நாளையும் அன்னையை வழிபட்டால் நலம் பெருகும்

7 /10

சரஸ்வதி தேவியை வணங்கினால், ஞானம் பிறக்கும், குழப்பங்கள் குறையும்

8 /10

அன்னை சரஸ்வதிக்கு உரிய சரஸ்வதி பூஜை நாளன்று செய்யும் வழிபாடுகள் வளமான வாழ்வைத் தரும்

9 /10

சக்தி வழிபாடு, புதனை வலுப்படுத்தும். அதிலும் நவராத்திரியில் சக்தியின் உச்சத்தில் இருக்கும் அன்னையின் எந்த ஸ்வரூபத்தை வணங்கினாலும், கிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்

10 /10

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது