தைவான் மருத்துவர் ஒருவர், மக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான தனது தனித்துவமான வழியை பின்பற்றுகிறார். ஆர்க்கிட் தீவில் உள்ள லான்யு பொது சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் ஹுவாங் சிங்-வெய்.
சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்லும்போது பார்வையாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பிகினி அணிந்து சொல்கிறார் இந்த மருத்துவர். இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதற்குக் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
"ஆடுகள், பன்றிகள், நாய்கள் மற்றும் நண்டுகளையும் கவனத்தில் வைத்து பயணிக்கவும்"
"லான்யுவில் சாலை நிலைமைகள் நன்றாக இல்லை. பழுதுபார்க்கப்படாத அல்லது மணல் நிறைந்த பகுதிகளைக் கடந்து செல்லும் போது மெதுவாகச் செல்லவும்."
"வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். சாலையின் நடுவில் நின்று புகைப்படங்களை எடுக்க வேண்டாம்" என்று டாக்டர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
"தயவுசெய்து மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணியுங்கள்" என்று கேட்டுக் கொள்கிறார் மருத்துவர் ஹுவாங் சிங்-வேய்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். குடி குடியைக் கெடுக்கும்...