லட்சுமி கடாட்சம் பெற, இந்த மந்திரத்தை தந்திரமா பயன்படுத்தினா நீங்க கோடீஸ்வரர்

Money Gain Tips: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக எப்பொழும் நல்ல சிந்தனைகளும், பிறரை நோகாமல் செய்யும் செயல்களும் செய்வதை உறுதியாக கடைப்டிக்கவேண்டும். லட்சுமி கடாட்சம், தழைத்து செல்வ செழிப்புடன் வாழ இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதும்

மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை இருந்தாலே இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும் என்பது ஐதீகம்.

1 /8

அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருக்கும் அன்னை மகாலட்சுமியே, தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி என சகல செளபாக்கியங்களியும் வழங்குபவள்...

2 /8

வாழ வைக்கும் கடவுளான விஷ்ணுவின் பத்னியான அன்னை லட்சுமியே, குடும்பத்தின் நிம்மதிக்கும் செல்வ வளத்திற்கும் ஆணிவேர்

3 /8

அன்னை லட்சுமியின் அருட்கடாட்சம் பெற விரும்புபவர்கள், சுத்தம் சுகாதரம் என ஒழுக்கமான பண்புகளையும், நற்சிந்தனைகளையும் கொண்டிருக்க வேண்டும்

4 /8

இனிப்புப் பொருட்களிலும், மங்களமான மற்றும் வாசனை நிறைந்த பொருட்களிலும் மகாலட்சுமி குடியிருப்பாள். எனவே, வீடுகளில் நறுமணம் கமழ வேண்டும். மற்றும் இனிப்புப் பொருட்கள் எப்போதும் இருக்க வேண்டும்

5 /8

அன்னைக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று, தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி  வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் 

6 /8

பாற்கடல் நாயகி என்று அறியப்படும் அன்னை, லட்சுமி கடலில் இருந்து உதித்தவள், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமனுடன் திருப்பாற்கடலில் வாசம் செய்பவள். அன்னையுடன் உப்புக்கு இருக்கும் தொடர்பு, நாம் வீட்டில் எப்போதும் உப்பு வைத்திருந்தால் நமக்கும் கிடைக்கும்.

7 /8

பாற்கடலில் இருந்து அன்னை லட்சுமி உதிக்கும்போது, சங்கும் அவருடன் வெளிப்பட்டது. எனவே, சங்கு, லட்சுமி தேவியின் சகோதரனாக கருதப்படுகிறது. சங்கு இருக்கும் வீட்டின் மீது அன்னையின் கருணைப்பார்வை என்றென்றும் நீங்காது  

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை