டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் லப்பர் பந்து மூலம் தீபாவளி விருந்து !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 அன்று லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இதன் மூலம் மீண்டும் லப்பர் பந்து படத்தினை ரசிகர்கள் கண்டு மகிழ ஒரு வாய்ப்பை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசுக் கொடுத்துள்ளது. மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  பற்றிய சில தகவல் இங்கேப் பார்போம்.

 ப்ளாக்பஸ்டர் “லப்பர் பந்து”  அக்டோபர் 31 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!  டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் தீபாவளியை கொண்டாட தயாராகுங்கள். கெத்து, அன்பு இருவரும் விருந்து கொடுக்க வருகிறார்கள். மேலும் படிப்போம். 

1 /8

லப்பர் பந்து மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார். இந்த வாய்பை மிஸ் பண்ணாதிங்க நண்பர்களே! திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைப்  பொது மக்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவராலும் முழு மனதுடன் பாராட்டப்பட்டது.

2 /8

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அக்டோபர் 31 முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'லப்பர் பந்து' படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! 

3 /8

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது.  

4 /8

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. 

5 /8

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை அவர்களின் வசதிகேற்ப மாற்றியுள்ளது.

6 /8

ஒரு சிறு கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாடும் இரண்டு கிரிக்கெட் காதலர்களைச் சுற்றி நடக்கும் ஒரு எளிய ஸ்போர்ட்ஸ் டிராமாவாகத்  தொடங்கும் இந்தத் திரைப்படம்.   

7 /8

லப்பர் பந்து இப்படம் சத்தமில்லாமல்  சமூகத்தில் ஆழமான வேரூன்றியிருக்கும் சாதி, பணம் எனப் பல வேறுபாடுகளை,  அடுக்குகளைக் கடக்க,  விளையாட்டு ஒரு கருவியாக மக்களுக்கு உதவும் என்பதைக் காட்டுகிறது.

8 /8

லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்விகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.