Pongal Gift 2025 | விரைவில் இலவச வேட்டி, சேலை! ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Priceless Saree And Dhoti Scheme: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலதாமதமின்றி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.

Pongal Gift Free Dhoti and Saree: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என தமிழக கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

1 /9

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும்

2 /9

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான (2024-2025) கரும்பு அரவையை டிசம்பர் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார் தொடங்கி வைத்தார். அப்பொழுது வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

3 /9

வரும் தைபொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் வழங்க இருக்கிறோம். கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் வந்ததால் வேட்டி, சேலை வழங்குவதில் சற்று காலதாமதமானது. ஆனால் இந்த ஆண்டு அது போல நடக்காது என்றார்.

4 /9

இந்த மாதம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வேட்டி மற்றும் சேலைகள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். அங்கிருந்து நியாய விலை கடைகளுக்கு வேட்டிகள் மற்றும் சேலைகள் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

5 /9

தைப்பொங்கலை ஒட்டி வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள் தரமாகவும், பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளது. வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணி நிறைவடையும் என்றார்.

6 /9

விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை குறித்து பலர் குறைகளை கூறினார்கள். ஆனால் நாங்கள் அவற்றை பரிசோதனை செய்து தான் பொது மக்களுக்கு வழங்குகிறோம். விலையில்லா வேட்டி, சேலைகளை நெசவாளர் சங்கங்கள் தான் உற்பத்தி செய்யு முடியும் என்பதால் அதற்கான ஒப்பந்தங்களும் விடப்படுகிறது என்றார்.

7 /9

இந்தமுறை சேலைகள் மட்டும் 15 ரகங்களில் வழங்க உள்ளோம் மற்றும் 5 ரகங்களில் வேட்டிகளையும் வழங்க உள்ளோம் என்றார். அனைத்தும் தரமானதாக இருக்கும் என்றார்.

8 /9

திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கவில்லை என்றார்கள். அதற்கு சரியான விளக்கம் அளித்த பிறகு எதிர்க்கட்சியினர் கூட தற்போது கேள்வி கேட்பதில்லை என்றார்.

9 /9

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் "எல்லா துறைகளுக்காகவும் சிந்தித்தும், சிறப்பாகவும் செயல்படுகிறார்" என்று தமிழக கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.