'ஹே சினாமிகா' படத்தை தொடர்ந்து பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் இரண்டாவதாக 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' என்கிற படம் வெளியாகவுள்ளது.
திரையுலகின் பிரபலமான நடன மாஸ்டர்களுள் ஒருவராக இருக்கும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படம் பிப்ரவரி 24ம் தேதியன்று திரையரங்கில் வெளியாகுகிறது.
'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ரியா ஷிபு மற்றும் எம்.மும்தாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புக்குழு சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த படத்தில் ரிது ஹரோன், பாபி சிம்ஹா, முனீஷ்காந்த், விக்ராந்த் மஸ்ஸே, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிருது ஹாரூன் ஆகிய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருக்கிறார்.
கன்னியாகுமாரி பகுதியில் வாழும் சில கும்பலின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் விஷயங்களும், பல வன்முறை காட்சிகளும் இப்படத்தில் நிறைந்துள்ளது.