BSNL vs JIO vs Airtel vs Vi? உங்களுக்கான சிறந்த திட்டம் எது?

Cheap and best Recharge Plans: கொரோனா தொற்று மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது. இப்போது மக்கள் பல பணிகளை தங்கள் தொலைபேசி மூலமே செய்ய வேண்டியுள்ளது. அதே போல், பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே அலுவலக பணிகளை செய்வதாலும், மாணவர்களின் வகுப்புகளும் ஆன்லைனிலேயே நடப்பதாலும் மக்களுக்கு அதிக தரவுக்கான தேவையும் இருக்கிறது.

 

எனினும், இப்போதெல்லாம் மக்கள் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ப்ரீபெய்ட் பயனர்கள் ஒரு மாத ரீசார்ஜ் பேக்கை முழுமையாக ஒரே முறையில் வாங்குகிறார்கள். இந்த நிலையில், பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 1 மாதத்திற்கான மலிவான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. ஒரு மாதத்திற்கான இந்த திட்டங்களில், தரவு, வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். 

1 /4

பிஎஸ்என்எல் (BSNL) திட்டத்தில் 1- ரூ .187 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2- தினசரி 2 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். 3- இந்த திட்டம் டெல்லி, மும்பை போன்ற எம்.டி.என்.எல் பகுதிகளில் செயல்படும்.

2 /4

ஜியோவின் திட்டத்தில்  1- ரூ .149 திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2- தினசரி 1 ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும் 3- தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கிடைக்கும்

3 /4

ஏர்டெல் (Airtel) திட்டத்தில் 1- ரூ .149 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2- 28 நாட்களுக்கு மொத்தம் 2 ஜிபி இணைய தரவு கிடைக்கும் 3- வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 300 எஸ்.எம்.எஸ் அனுப்பும் நன்மையும் கிடைக்கும்

4 /4

Vi திட்டத்தில் 1- ரூ .149 திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2- 28 நாட்களுக்கு மொத்தம் 3 ஜிபி தரவு கிடைக்கும்  3- வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 300 எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான வசதி கிடைக்கும்.