ரோல்ஸ் ராய்ஸ் முதல் ஆடி கார் என ஆடம்பர கார் பிரியர் ஜஸ்டின் பீபரின் அருமையான கார் சேகரிப்பு இவை...
கனடிய பாப் நட்சத்திரமான ஜஸ்டின் பீபர், பல தனிப்பயனாக்கப்பட்ட வாகனங்களுடன், ஈர்க்கக்கூடிய மற்றும் ஸ்டைலான கார்களை வைத்திருப்பவர். இந்த ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் அவருக்கு பிடித்த கார்களில் ஒன்றாகும்.
ஜஸ்டின் பீபரின் மதிப்புமிக்க உடைமைகளில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ். West Coast Customs உடன் இணைந்து, முழுதும் மறைக்கப்பட்ட சக்கரங்களுடன் மிதக்கும் இந்தக் காரின் விலை ரூ. 2.5 கோடி ($330k) ரூபாய் ஆகும்.
இத்தாலிய சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியால் ஜஸ்டின் பீபர் தடை செய்யப்படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மிலனை தளமாகக் கொண்ட செய்தித்தாள் வெளியிட்டுள்ள கட்டுரையின்படி, பாடகர் ஜஸ்டின் பீபரின் நடத்தை மற்றும் கார்களின் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டின் நெறிமுறைக் குறியீடுகளை மதிக்காத போக்கு தடைக்கு காரணம் என்று தெரிய வருகிறத
உலகின் முதல் உற்பத்தி ஆடம்பர பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற அமெரிக்க நிறுவனமான ஃபிஸ்கர் ஆட்டோமோட்டிவ் தயாரித்த ஃபிஸ்கர் கர்மாவை ஜஸ்டின் பீபர் வைத்திருக்கிறார்.
ஒரு Huracan மற்றும் Urus உட்பட இரண்டு லம்போர்கினி கார்களை வைத்திருக்கிறார் ஜஸ்டீன்.
சிவப்பு நிற லம்போர்கினி உர்ஸ்
ஜஸ்டின் பீபரின் கேரேஜில் உள்ள பிரத்யேக கார், பொன்னிற மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன்