இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பெய்யும்

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ராசி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசியிலும் தென்படும். அதேபோல் புதன் கிரகம் ஞானம் மற்றும் பேச்சின் கடவுள் என்று அறியப்படுகிறார். யாருடைய ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றுள்ளாரோ அவர்கள் அதீத பலனை அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். புதன் அசுப பலன்களை கொடுக்க ஆரம்பித்தால், அந்த நபரின் முன்னேற்றம் நின்றுவிடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாறுகின்றது. எனவே புதன் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம். 

1 /5

புதிய பெயர்ச்சி: சமீபத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி புதன் சிம்ம ராசியில் இருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைந்தார். தேபோது அக்டோபர் 25 வரை 34 நாட்கள் கன்னி ராசியில் புதன் தங்குகிறார். புதன் சஞ்சாரத்தின் பலன் பல ராசிகளில் உள்ளது. இருப்பினும், இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

2 /5

மிதுனம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகத்தின் சஞ்சாரமும் அனைத்து 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்துகிறது. கன்னி ராசியில் புதன் நுழைந்ததால், மிதுன ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாகவும், சுகமாகவும் இருக்கும். குடும்பத்துடனான உறவு வலுவாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை தங்கள் ஆளுமையால் ஈர்ப்பீர்கள். புதிய வேலையை தொடங்க நினைத்தால் அதற்கு இந்த நேரம் சாதகம். உங்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.  

3 /5

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானது. சகோதர, நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த ராசிக்கு வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். குறிப்பாக பத்திரிகை, எழுத்து, நடிப்பு, இயக்கம், ஆங்கரிங் போன்ற துறை சார்ந்தவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

4 /5

சிம்மம்: கன்னி ராசியில் புதன் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த நேரம் இவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த காலகட்டத்தில் பூர்வீக நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. 

5 /5

கன்னி: கன்னி புதனின் ராசியாக கருதப்படுகிறது. இந்த ராசியில் புதன் நுழைவது கன்னி ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். நோயுற்றவர்களின் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனைகள் உண்டாகும். பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.