தீபா மாலிக்கு ஆறு வயதில் அவரது முதுகு தண்டு ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்து மீள மூன்று ஆண்டுகள் ஆனது.
தீபா மாலிக்- கணவர் பிக்ரம் சிங் மற்றும் தேவிகா மற்றும் அம்பிகா இரண்டு மகள்கள் உள்ளனர். Facebook/Deepa Malik
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தீபா மாலிக், ராணுவ அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 17 ஆண்டுகளுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தபோது, இடுப்புக்கு கீழே உடல் உறுப்புகள் செயல் இழந்தன. அதை சரி செய்வதற்கு 31 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இடுப்புக்கும், தொடைக்கும் இடையே 183 தையல்கள் போடப்பட்டன.
டிராக்டர் வாகனம் உரிமம் பெற்றமுதல் நபர். Facebook/Deepa Malik
தீபா மாலிக்- இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சம்மேளனம் (F.M.S.C.I) உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் உடல் ஊனமுற்ற நபர் ஆவார். Facebook/Deepa Malik
தீபா மாலிக்- இமாலய மோட்டார் சங்கம் (H.M.A) மற்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சம்மேளனம் (F.M.S.C.I) சேர்ந்தார். இவர் பூஜ்ஜியம் வெப்பநிலையில் எட்டு நாட்களில் 1,700 கி.மீ. பைக்கில் சென்று 18,000 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள இடத்தில் தன்னை நிலை நிறுத்தினார்.Facebook/Deepa Malik
தீபா மாலிக்- நீச்சல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டெறிதல் உட்பட 54 தேசிய தங்க பதக்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு 13 சர்வதேச பதக்கங்கள் வைத்துள்ளார்..Twitter@Deepa Malik
2008-ம் ஆண்டில் ஒரு கி.மீ. தூரத்தை சக்கர நாற்காலியில் கடந்து லிம்கா உலக சாதனை புரிந்துள்ளார்..Twiiter@Deepa Malik
பாராலிம்பிக்ஸ் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் தீபா மாலிக்
45 வயதில் அர்ஜுனா விருது பெற்ற ஒரே வீரர் இவரே..Twitter/Deepa Malik
நீச்சல் விளையாட்டுகாக தீபா மாலிக்கிற்கு 2012-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. Twitter@Deepa Malik