தினேஷ் கார்த்திக் ஓய்வில் யுடர்ன்.. தென்னாப்பரிக்க டி20 லீக்கில் ஆடுகிறார்

தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அண்மையில் ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறார். 

1 /8

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாத தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டி20 லீக்கில் ஆட இருக்கிறார். இவருடைய அணியில் தான் ஜோ ரூட் உள்ளிட்டோர் விளையாட இருக்கின்றனர்.   

2 /8

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இருந்த தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

3 /8

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக ஆடிய அவர், கடைசியாக ஆர்சிபி அணியில் தான் இருந்தார். அதிரடி ஆட்டம் மூலம் மேட்ச் வின்னராகவும் இருந்தார் தினேஷ் கார்த்திக்  

4 /8

இனி இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பே கிடைக்காது என்ற சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தினேஷ் கார்த்திக் ஆடிய அதிரடி ஆட்டம் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.  

5 /8

இவரின் இந்த கம்பேக் சர்வதேச கிரிக்கெட்டில் பல முன்னணி வீரர்களுக்கும் ரோல்மாடலானது. அதன்பிறகு ஆர்சிபி அணியுடனே இருந்த தினேஷ் கார்த்திக் இனி கிரிக்கெட் களத்தில் இருந்து விடைபெறுகிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்தார்.   

6 /8

அவருக்கு ஆர்சிபி அணியினர் ராயல் சல்யூட் அடித்து டிகேவின் ஓய்வை கவுரப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களிலேயே ஆர்சிபி அணியின் பேட்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டார் டிகே.   

7 /8

வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் செயல்பட இருக்கிறார். ஐபிஎல் தொடரைக் கடந்து வர்ணனையாளராகவும் இருக்கிறார். தென்னாப்பிரிக்க டி20 லீக் போட்டிக்கு விளம்பரதாரராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார்.  

8 /8

ஆனால் அடுத்த நாளே பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துக்கு சொந்தமான அணி தான் அது.