இயக்குனர் ஷங்கரின் மகளுக்கு மீண்டும் திருமணம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் எளியமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

 

1 /5

இயக்குனர் ஷங்கருக்கு மொத்தம் 2 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். அவர் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.   

2 /5

ஷங்கரின் மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா. இவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஷங்கர் படங்களை போலவே மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.  

3 /5

ஆனால் இந்த திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், ரோஹித் போக்ஸோ வழக்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.  இந்த பின்பு, இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.  

4 /5

இந்நிலையில், நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவிற்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. தற்போது உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.   

5 /5

நடிகை அதிதி ஷங்கர் இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.