Yoga for Weight Loss: தொப்பை கொழுப்பை கரைக்கும் ‘சூப்பர்’ யோகாசனங்கள்!

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தொப்பை, உடல் பருமன் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது.உடல் பருமன் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைக்க மக்கள் கடுமையான டயட்டை கடைபிடிப்பதோடு, உடல் பயிற்சியும் செய்கின்றனர். 

இருப்பினும், அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பது கடினம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க, வீட்டிலேயே யோகா செய்யலாம். இது வியக்கத்தக்க பலன்களை கொடுக்கும்.

1 /7

யோகாசனங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பலன் அளிக்கிறது. மூளை ஆற்றலை அதிகரிப்பது முதல், கடுமையான நோய்களை தீர்ப்பது வரை யோகாசனங்களால் ஏற்படும் நன்மை எண்ணிலடங்காது. அத்தகையை சூழ்நிலையில், தொப்பை கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் செய்ய வேண்டிய யோகாசனங்களை அறிந்து கொள்வோம்.

2 /7

தனுராசனத்தில், உடலை வில் வடிவில் வளைக்க வேண்டும். இதைச் செய்ய, உங்கள் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். உடலைப் பின்னோக்கித் வளைக்கும் போது, ​​கைகளால் கால்களைப் பிடிக்க முயற்சிக்கவும். படத்தில் உள்ளபடி இந்த யோகாவை செய்யலாம்.

3 /7

கோப்ரா போஸ் அதாவது புஜங்காசனம் செய்ய, தரையில் படுத்து, இரு கைகளையும் தரையில் வைக்கவும். தலையை முன்னோக்கி இழுத்து நாகப்பாம்பு போல் தலையை தூக்கவும். இந்த போஸை சிறிது நேரம் நீடிக்கவும். புஜங்காசனம் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

4 /7

திரிகோனாசனம் செய்வதன் மூலம் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கலாம். திரிகோனாசனாம் செய்ய, ஒரு காலை வளைத்து படத்தில் காட்டியதை போல் நிற்கவும். படத்தில் உள்ளபடி இந்த யோகாவை செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடை குறையும்.  

5 /7

நாற்காலி போஸ் அதாவது உட்கடாசனம் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த யோகா ஆசனம். இது தசைகளுக்கு நல்லது. இந்த ஆசனத்தில் நாற்காலியில் உட்காருவது போல் நிற்க வேண்டும். உட்கடாசனம் உடல் எடையை குறைக்கிறது.

6 /7

கொழுப்பை எரிப்பதன் மூலம் எடையைக் குறைக்க பலகாசனம் மிகவும் நன்மை பயக்கும். , தரையில் குப்புற படுத்து, முழங்கைகள் மற்றும் கால்களின் உதவியுடன் உங்கள் உடலை உயர்த்தவும். இந்த போஸில் சிறிது நேரம் நீடித்து இருங்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.