எவ்வளவு கடினமாக உழைத்து பணம் சேர்த்தும் பணம் உங்களிடம் தங்கவில்லையா? மன நிம்மதி எட்டாத தூரத்தில் உள்ளதா? இந்த சிறிய யோசனைகளைப் பின்பற்றிப் பாருங்களேன்!! பண வரவு அதிகரிக்கும், மன மகிழ்ச்சி உண்டாகும்!!
ஒரு வீட்டில் பூஜை அறை மிக முக்கியமான இடமாகும். இறை அம்சம் உள்ள பகுதி என்பதால் பூஜை அறையை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வாடிய பூக்களை உடனுக்குடன் எடுத்து விட வேண்டும். தெய்வங்களின் உடைந்த படங்களை பூஜை அறையில் வைக்கக்கூடாது. பூஜை அறையில் உள்ள லட்சுமி படத்திற்கு முன்னால் ஒரு கிண்ணத்தில் துவரம் பருப்பை வைத்து, அதில் லட்சுமியின் முகம் தெரியும் படி ஒரு முகம் பார்க்கும் சிறு கண்ணாடியை வைத்துப் பாருங்கள். நீங்கள் எதிர்பாராத வண்ணம் பண வரவும் மன நிம்மதியும் கிடைக்கும்.
வீட்டில் குத்து விளக்கு ஏற்றுவது மிகவும் லட்சுமிகரமான ஒரு விஷயமாகும். எண்ணெய் ஊற்றி திரி போட்டு நாம் தினமும் ஏற்றும் விளக்கு நம் வீட்டிலும் வாழ்விலும் இருளை நீக்கி செல்வச் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும். செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கை ஐந்து முகமாக ஏற்றி வழிபட்டால் லட்சுமி கடாக்ஷம் பெருகும்.
கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். வெள்ளிக்கிழமைகளின் கல் உப்பு வாங்குவது நல்லது. இந்த செயல் வெள்ளிகிழமை வீட்டிற்கு மகாலட்சுமியை அழைத்து வருவது போன்றது.
மற்றவர்களுக்கு உதவுவது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அப்படி செய்யும்போது, நாமும் சில விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கு பணம் கடனாகக் கொடுக்கும் போது அதை வீட்டு வாசற்படியில் நின்று கொடுக்ககூடாது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் கொடுக்கக்கூடாது. இதைக் கடைபிடித்தால், கொடுத்த பணம் திரும்பி வரும். மேலும் பலருக்கு உதவ பணம் சேரும்.
குப்பை என்பது நமக்குத் தேவையற்ற பொருட்களின் சேர்க்கை. அதை மூன்று நாட்களுக்கு மேல் வீட்டிலேயே தங்க விட்டால், தரித்திரம் சேரும். தினமுமே குப்பையை வீட்டிலிருந்து வெளியேற்றுவது சாலச் சிறந்தது.
செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களும் அம்மனுக்கும் முருகனுக்கும் உகந்த நாட்கள். இந்த நாட்களில் அவர்களின் அம்சம் வீட்டில் நிறைந்திருக்கும். இந்த இரு நாட்களிலும் வீட்டை மொழுகுவது லட்சுமி கடாக்ஷத்தை அகற்றுவது போன்றதாகும். ஆகவே அதை தவிர்ப்பது நல்லது. மற்ற நாட்களிலும் தண்ணீரில் கல் உப்பு போட்டு வீட்டை மொழுகினால், தேவையற்ற எதிர்மறை அதிர்வுகளும் எண்ணங்களும் வீட்டிலிருந்து அகலும்.
குபேரன் ஊறுகாய் பிரியர். வீட்டில் பல வகையான உறுகாயை வைத்திருந்தால் அவரும் ஆனந்தமாய் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்!!