EPF: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும், இது சம்பள அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO என்னும் ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952ம் ஆண்டின் EPF திட்டச் சட்டம், 1976ம் ஆண்டின் EDLI சட்டம் மற்றும் 1995ம் ஆண்டின் ஓய்வூதியத் திட்டச் சட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுகிறது.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பணியாளரின் அடிப்படைச் சம்பளத்தில் தலா 12% தொகையை EPF கணக்கில் செலுத்துகின்றனர். இதன் மூலம் உங்கள் அடிப்படை சம்பளத்தின் 24% தொகை மாத மாதம் பிஎஃப் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது.
PF என்னும் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் பணத்திற்கு, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வட்டியை வழங்குகிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வுபெறும் போது, ஊழியர் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மொத்தமாகப் பெறுகிறார், அதில் சம்பாதித்த வட்டியும் அடங்கும். மேலும் அது வரி விலக்கு.
வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.50,000 சம்பளத்தில் ரூ.2.5 கோடி நிதி திரட்டலாம். நீங்கள் பிஎஃப் கணக்கில் ரூ.2.5 கோடி நிதியை சேர்க்க விரும்பினால், இதற்கு உங்கள் சம்பளம் (சம்பளம் + அடிப்படை) ரூ.50 ஆயிரமாக இருக்க வேண்டும்.
PF உறுப்பினர் குறைந்தது 30 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். பிஎஃப் நிதியில் 8.1 சதவீத வட்டி கிடைக்கிறது. தவிர, உங்கள் சம்பளமும் ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரிக்கையில், முதலீடும் வட்டியும் அதிகரித்து கொண்டே இருக்கும், ஓய்வுபெறும் போது உங்களிடம் 2.5 கோடி ரூபாய் கார்பஸ் இருக்கும்.
EPFO உறுப்பினராவதற்கான தகுதி: EPFO உறுப்பினராக, நீங்கள் அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரிய வேண்டும். 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இருப்பது அவசியம்.
EPFO உறுப்பினராக இருப்பதால், சேமிப்புடன், காப்பீட்டுத் தொகை, ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வட்டி வருமானம் ஆகியவற்றைப் பெறுகிறார். இதனுடன், அவசர காலங்களில் இந்த நிதியிலிருந்து பணத்தையும் எடுக்கலாம்.
EPFO இலவச காப்பீடு வசதி: பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களும் இயல்பாகவே காப்பீடு பெறுகிறார்கள். பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI) கீழ், பணியாளர் ரூ.6 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
செயலில் உள்ள EPFO உறுப்பினர் தனது சேவைக் காலத்தில் மரணம் அடைந்தால், அவரது நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். நிறுவனங்களும் மத்திய அரசும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த சலுகையை வழங்குகின்றன.