Habits That Spoils Your Brain Power: மூளை என்பது உடலின் அனைத்து பாகங்களையும் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான உறுப்பு. எனவே, மூளை ஆற்றல் குறைந்தால், அது பலவிதமான உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். ஆனால், மனிதர்களின் சில பழக்கவழக்கங்கள் மூளையில் ஆற்றலை காலி செய்து விடும்.
தற்போதையை, மோசமான வாழ்க்கை முறையால், மக்கள் பல கடுமையான நோய்களுக்கு இரையாகி வருகின்றனர். மேலும் மூளையும் இளவயதிலேயே சோர்வடைந்து விடுகிறது. உங்களின் சில பழக்கவழக்கங்களால் உங்கள் மூளை இளவயதிலேயே பாதிக்கப்படலாம்.
Habits That Spoils Your Brain Power: மூளையின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும், பாதிக்கும் பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் உடனடியாக இந்த பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மூளையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த பழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...
காலை உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவாகும், இது நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலை நமக்குத் தருகிறது. காலை உணவைத் தவிர்ப்பது, மூளையின் செயல்திறனை பாதிப்பதோடு, தலைவலி, சோர்வு, மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும். காலை உணவைத் தவிர்ப்பது, மதிய உணவை அதிகமாகச் சாப்பிட வைக்கும். இது உடல் பருமன் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிகப்படியான காபி குடிப்பது, உங்களை சோர்வடையச் செய்யும். மூளை இரசாயனமான அடினோசின் விளைவுகளைத் தடுப்பதன் மூலம் மூளை ஆற்றல் பாதிக்கப்படும். அதே நேரத்தில், ஆற்றலுடன் தொடர்புடைய 'ஃபைட்-ஆர்-ஃப்ளைட்' ஹார்மோனான அட்ரினலின் வெளியீட்டைத் தூண்டுகிறது. காலையில் அதிகமாக காபி குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி, எரிச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்த உடனேயே முதலில் மொபைல் போன்கள் போன்ற கேஜெட்களுடன் ஈடுபடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எழுந்தவுடன் உடனடியாக உங்கள் மொபைலைச் சரிபார்ப்பது மன அழுத்த உணர்வுகளை அதிகப்படுத்தி, உங்களைச் சோர்வடையச் செய்யலாம். இது உங்கள் கண்பார்வை மற்றும் மூளை செயல்படும் திறனையும் பாதிக்கிறது.
மன அழுத்தம் கவலை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம் போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நுட்பங்களைப் பயிற்சி செய்வது முக்கியம்.
மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் தூக்கமின்மை காரணமாக நினைவாற்றல் குறைபாடுகள், கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, மூளை ஆரோக்கியமாக இருக்க, குறைந்தது 7-8 மணிநேர தூக்கம் அவசியம்.
அதிக சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது மூளையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகையான உணவு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது நியூரான்களுக்கு சேதம் விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது முக்கியம், இதற்காக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
உங்கள் உடலை போதுமான அளவு நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியம். காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தரும். உடலில் போதுமான அளவு நீர் சத்து இல்லாதபோது, உங்கள் மூளை குறைந்த எரிபொருளில் இயங்கும் நிலை ஏற்படும். இது உங்களை மேலும் சோர்வடையச் செய்யலாம் மற்றும் சோர்வு அல்லது மனநிலை பாதிப்பு ஏற்படலாம்.