Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..

Actor Mahesh Babu Son : தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர், மகேஷ் பாபு. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இதில், மகேஷ் பாபுவின் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Mahesh Babu Son : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும், பணக்கார நடிகராகவும் விளங்குபவர், மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியாகி ஹிட் அடித்த பல படங்கள், தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பாலும் நடிகர் விஜய்தான் நடித்திருக்கிறார். சரளமாக தமிழ் பேசத்தெரிந்த தெலுங்கு நடிகர்களுள் ஒருவர் மகேஷ் பாபு. இவருக்கு தமிழ் நாட்டிலும் பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர், 2005ஆம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்-ஒரு மகள் என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில், மகேஷ் பாபுவின் மகன் அவரது பள்ளி படிப்பை முடித்து, பட்டம் பெற்றிருக்கிறார். அப்போது, மகேஷ் பாபு அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /8

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவிற்கு தமிழகத்திலும் பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர், எக்ஸ்பிரஷனே மாற்ற தெரியாதவர் என்று தனது நடிப்பிற்காக விமர்சனம் வாங்கினாலும் இவர் படத்தை திரையரங்கிற்கு சென்று விசிலிடித்து பார்க்க, இவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

2 /8

மகேஷ் பாபுவின் நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் என்ற படம் வெளியானது. இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இப்படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், இதில் வந்த ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் வைரலாகி வருகிறது. 

3 /8

மகேஷ் பாபுவிற்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு நம்ரதா என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். 

4 /8

மகேஷ் பாபுவின் மகள் பெயர் சித்தாரா. இவர், இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்ட பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். 

5 /8

மகேஷ் பாபு, தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு குடி பெயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், அவர் மட்டும் ஐதராபாத்தில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

6 /8

மகேஷ் பாபு, தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

7 /8

மகேஷ் பாபுவின் மகன் கௌதமிற்கு தற்போது 17 வயதாகிறது. இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கிறார். 

8 /8

மகேஷ் பாபுவின் மகனை பார்த்த ரசிகர்கள், இவர் அச்சு அசலாக தந்தையை போல இருப்பதாக கூறி இதனை வைரலாக்கி வருகின்றனர்.