Palm Fountain in Jumeirah, Dubai: சொர்க்கம் விண்ணிலா, துபாயிலா?

பாம் நீரூற்று, மிகப் பெரிய நீரூற்று என்ற கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது.தென் கொரியாவின் பான்போ மூன்லைட் ரெயின்போ நீரூற்று தான் இதற்கு முன்னதாக உலகின் மிகப் பெரிய நீரூற்றாக இருந்தது. 

துபாயில் Palm Fountain நீரூற்றுJumeirahவில் அமைந்துள்ளது. விண்ணில் இருந்து மண்ணில் மழை நீர் அள்ளித் தெளித்து நனைந்திருப்போம். நவீன தொழில்நுட்பங்களின் மூலமாக அசத்தும் இந்த நீரூற்று மண்ணில் இருந்து விண்ணைத் தொடும் நீரூற்று.இதில் இருந்து தெளிக்கும் திவலைகளும் நம்மை நனைக்கும்...  

1 /6

வண்ணங்களே எண்ணங்களை  பிரதிபலிக்கும். அதிலும் நீரும் இணைந்தால் அதுவும் நீரூற்றாய் வண்ணங்கள் நிறைந்து வழிந்தால் இதுதான் சொர்க்கம்.  சொர்க்கம் என்பது விண்ணிலா மண்ணிலா இல்லை துபாயின் இந்த வண்ண நீரூற்றிலா?

2 /6

நீரா இல்லை நீர்த்தாரையா? இரண்டும் அல்ல, கடல்நீரில் அமைந்திருக்கும் நீரூற்று. கின்னஸ் சாதனையை படைத்த உலகின் மிகப்பெரிய நீரூற்று

3 /6

நீருக்கு நிறமில்லை, ஆனால் நீரூற்றுக்கு பலவண்ணங்கள்..எண்ணில் அடங்கா வண்ணங்கள், நம் எண்ணங்களில் நிறைந்து வழியும் உணர்வுகளை நிறங்களாய் பிரதிபலிக்கும் நீரூற்று...

4 /6

மண்ணில் இருந்து விண்ணுக்கு மேகமாக அல்ல, நீராக செல்லும் ஊற்று, நீரூற்று

5 /6

6 /6