ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்

  • Nov 14, 2024, 10:21 AM IST
1 /8

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மிகவும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. தற்போது சனி கும்ப ராசியில் இருக்கிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை தொடங்குவதாலும் சில ராசிகளுக்கு ஏற்கனவே ஏழரை சனி உள்ளதாலும், வாழ்க்கையில் போராட்டங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். 

2 /8

ஏழரை நாட்டு சனி: ஏழரை நாட்டு சனி என்பது மொத்தம் ஏழரை சனி ஆண்டுகள் நீடிக்கும் காலம். இதில் விரைய சனி முதல் இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி அடுத்த இரண்டரை ஆண்டுகள், பாத சனி கடைசி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது.: ஏழரை நாட்டு சனி என்பது மொத்தம் ஏழரை சனி ஆண்டுகள் நீடிக்கும் காலம். இதில் விரைய சனி முதல் இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி அடுத்த இரண்டரை ஆண்டுகள், பாத சனி கடைசி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது.

3 /8

ஏழரை நாட்டு சனி காலத்தில், எல்லா தரப்பிலும் ஜாதகர் பாதிப்புகளை சந்திக்கும் நிலை இருக்கும். ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால், பொருளாதாரம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகள் மனிதனை உலுக்கி விடும். இந்நிலையில் 2025 சனி பெயர்ச்சி காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

4 /8

மேஷம்: மீன ராசியில் சனி பெயர்ச்சி காரணமாக மேஷ ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். இதனால், பொருளாதார நிலை மோசமடையலாம். வருமானம் குறையும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். இதனால் நிதி நிலை மிகவும் மோசமாகும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையிலும் பதற்றம் அதிகரிக்கும். மனதில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்

5 /8

கும்பம்: 2025 சனி பெயர்ச்சி காரணமாக கும்ப ராசிகளுக்கு ஏழரையின் கடைசிக் கட்டமான பாத சனி தொடங்கும். இதனால், பணப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். கடின உழைப்பின் பலனைப் பெற முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் கெடும். காயங்கள், இடுப்பு, முதுகு வலி அல்லது முழங்கால்களில் சளி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

6 /8

மீனம்: மீன ராசிகளுக்கு 2028 வரை ஏழரை நாட்டு சனி காலம் நீடிக்கிறது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிதி தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருக்கும். உடல்நலம் மோசமடையலாம். மன அழுத்தம் அதிகரிக்கும். பொருளாதார நிலை பலவீனமடையும். பண இழப்பு அதிகரிக்கும். வேலை இழப்பும் ஏற்படலாம். புதிய வேலை தேடும் முயற்சிகளுக்கு எளிதில் பலன் கிடைக்காது.

7 /8

ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள்: ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதால், சனிபகவான் மனம் மகிழ்வார். கடின உழைப்பாளிகளுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். சனிக்கிழமையன்று எறும்புகளுக்கு உணவளித்தால், ஏழரை சனியின் தாக்கம் குறையும். சனிக்கிழமையன்று ஹன்னுமனை வழிபடுவதன் மூலம் ஏழரை சனியின் தாக்கங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமை 11 முறை பாராயணம் செய்தால் சனியின் பாதிப்பு நீங்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.