இந்த நகரம் ‘ஏடன்’ (‘Aten) அல்லது ‘தொலைந்து தங்க நகரம்’ (lost golden city) என்று அழைக்கப்படுகிறது. 3000 ஆண்டு பழமையான நகரில் இருந்து புதையுண்டிருந்த எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன
18 ஆம் அரச வம்சத்தின் ஒன்பதாவது மன்னரான மூன்றாம் அமென்ஹோடெப் மன்னனின் ஆட்சிக்கு முந்தைய நகரம் ஆகும், அவர் 1391 முதல் கிமு 1353 வரை எகிப்தை ஆண்டார்.
மூன்றாம் அமென்ஹோடெப் (Amenhotep III) மன்னர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்
அவரது இராஜ்ஜியம் மேற்கு ஆசியாவின் யூப்ரடீஸ் முதல் நவீன சூடான் வரை நீண்டிருந்தது.
அமன்ஹோடெப் III இன் ஆட்சிக்காலத்திற்கு பிறகு துட்டன்காமூன் மற்றும் ஐ (Ay) என்பவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்தனர்
அகழ்வாராய்ச்சியின் போது, மோதிரங்கள் போன்ற நகைகள், வண்ண மட்பாண்ட பாத்திரங்கள், தாயத்துக்கள் மற்றும் மூன்றாம் மன்னர் அமன்ஹோடெப்பின் முத்திரைகள் தாங்கிய மண் செங்கற்களையும் கண்டுபிடிக்கப்பட்டன
லக்சருக்கு அருகிலுள்ள ராம்செஸ் III மற்றும் அமன்ஹோடெப் III கோயில்களுக்கு இடையே 2020 செப்டம்பரில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.
எகிப்தின் வரலாற்றிலே மிக முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படுவது துட்டன்காமன் கல்லறை
தங்க நகரம் கண்டுபிடிப்பு முக்கிய இடத்தை பெறுகிறது.