181km வரை செல்லும் Top 4 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ் - விலை?

ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிலோ மீட்டர் செல்லும் ஸ்கூட்டர் உள்ளிட்ட டாப் 4 ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதில் நீங்களும் ஒருவராக இருந்து நல்ல மின்சார வாகனத்தை தேடுபவராக இருந்தால், ஓலா S1 Pro, பஜாஜ் Chetak Electric, டிவிஎஸ் iQube மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான்டி பிளஸ் ஸ்கூட்டர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 

1 /4

TVS iQube : TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய். இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ வரை செல்லும். அதே நேரத்தில், இந்த ஸ்கூட்டர் 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 78 கிமீ வரை செல்லும். iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும். 

2 /4

ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலாவின் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,29,999. இந்த ஸ்கூட்டரில் 3.97 கிலோவாட் பேட்டரி இருக்கும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 181 கிமீ வரை செல்லும். அதே சமயம் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிமீ பயணிக்கலாம். ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 48 நிமிடங்கள் ஆகும்.  பெரிய 7 அங்குல டச்ஸ்கிரீன், நேவிகேஷன் சிஸ்டம், OTA அப்டேட், 4G இணைப்பு, ரிவர்ஸ் மோட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ப்ராக்ஸிமிட்டி அன்லாக், சைட் ஸ்டாண்ட் அலர்ட், போன்ற ஹைடெக் அம்சங்களும் உள்ளன. ப்ளூடூத் இணைப்பும் உள்ளது.

3 /4

ஜான்டி பிளஸ் இ-ஸ்கூட்டர்: இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 460 ரூபாய். Jaunty Plus e-scooter ஆனது 60V/40Ah பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்கூட்டருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை செல்லலாம். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும். Jaunty Plus ஆனது உயர் செயல்திறன் கொண்ட மோட்டார், க்ரூஸ் கண்ட்ரோல் சுவிட்ச், எலக்ட்ரானிக் அசிஸ்டட் பிரேக்கிங் சிஸ்டம் (EABS) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.   

4 /4

பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இரண்டு வகைகளில் அர்பன் மற்றும் பிரீமியம் வகைகளில் பஜாஜ் அறிமுகப்படுத்தியது. இவற்றின் எக்ஸ் ஷோரூம் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இந்த மின்சார ஸ்கூட்டர் ரெட்ரோ பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரவுண்ட் ஹெட்லேம்ப் மற்றும் LED டேடைம் ரன்னிங் லைட், குரோம் பெசல் உள்ளிட்டவை இருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 90 கிமீ வரை பயணம் செய்ய முடியும். சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகும்.