நானே ஹீரோ நானே வில்லன்: வைரசை மையமாகக் கொண்ட Hollywood Movies!!

இன்று உலகமே கொரோனா தொற்றால் திண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், திரைப்பட இயக்குனர்களின் கற்பனையில் இப்படிபட்ட தொற்றும் இந்த சூழலும் பல ஆண்டுகள் முன்னரே தோன்றியுள்ளன என்பது ஆச்சரியம் அளிக்கிறது. வைரஸ் தொற்றை அடிப்படையாகக் கொண்டு வந்த சில Hollywood திரைப்படங்களைப் பார்ப்போம்.

1 /5

உலகெங்கிலும் மக்கள் ஒரு வினோதமான வைரசால் பாதிக்கப்படுகிறார்கள். வைரசின் பரவும் விதம் துரிதமாக இருக்கிறது. படு பயங்கர வேகத்தில் வைரஸ் மக்களை தன் பிடியில் சிக்க வைக்கிறது. இப்போதுள்ள கொரோனா லாக்டௌன் வேளையில் இப்படத்தை பார்த்தவர்கள் மிக அதிகம். இப்படம் நாம் இருக்கும் சூழலுக்கு ஒரு முன்னோட்டம்.

2 /5

ஒரு உலகளாவிய தொற்றிற்குப் பிறகு அதிலிருந்து தப்பித்து பிழைத்தவர்களை தேடி வரும் ஒரு மருத்துவரும் அவரது குழுவும் எதிர்பாராததை எதிர்கொள்கிறார்கள்!!

3 /5

ஆப்பிரிக்க காடுகளில் கண்டறியப்படும் வைரசை ரகசியமாக வைக்க அதனால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை தீயிட்டு கொல்கிறது அமெரிக்க அரசு. வைரசை ரகசியமாக வைகக் முடிந்ததா? படம் பதில் சொல்லும்!!

4 /5

வைரசிலிருந்து தப்பிக்க ஒதுக்குப்புறமான கடற்கரைக்குச் செல்லும் நான்கு நண்பர்கள். தப்பித்தார்களா? வைரஸ் தப்பிகக் விட்டதா? பரபரப்புடன் பதில் கூறுகிறது படம்!

5 /5

Rage Virus என்ற ஒரு வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க, டான், அவர் மனைவி அலைஸ் மற்றும் சிலர் ஒரு இடத்தில் ஒளிந்து கொள்கின்றனர். அங்கு வரும் ஒரு சிறுவன் மீது அவர்கள் பரிதாபப்பட்டு சேர்த்துக்கொள்ள ..அதன் பிறகு…ஆபத்து ஆரம்பம்!!