Health Alert: மன அழுத்தத்தை அதிகரிக்கும் ‘சில’ உணவுகள்!

மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை அதிகரிக்கும் சில பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது மன நலத்திற்கு நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.  

1 /4

உணவு மற்றும் பானங்கள் நமது ஆரோக்கியம் மற்றும் மூளையுடன் நேரடியாக தொடர்புடையவை.  மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் அதிகம் இருக்கும் போது, சில பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஆம், சில பொருட்களை உட்கொள்வதன் மூலம், உங்கள் மன சோர்வும், குழப்பமும், மன உளைச்சலும் அதிகரிக்கலாம்.

2 /4

பேக் செய்யப்பட்ட பேஸ்ட்ரிகள், பிஸ்கட்கள் மற்றும் ரொட்டிகளில் நிறைய சோடியம் காணப்படுகிறது, இது மன அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் அஜீரண பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே, சோடியம் நிறைந்த பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.  

3 /4

டீ,  காபியை இரண்டிலும் காஃபின் உள்ளது. டீயும் காபியும் தூக்கத்தை பாதிக்கும்.  இதன் காரணமாக  மூளை மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகலாம். காஃபின் உள்ள பொருட்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வும் அதிகரிக்கும். மனச்சோர்வு பிரச்சனை இருந்தால், நீங்கள் காஃபின் உள்ள பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். 

4 /4

ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும், நீங்கள் மனச்சோர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால்,  நீங்கள் மறந்தும் கூட மது அருந்தக்கூடாது, ஏனென்றால் இதனால், தூக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கும்.  (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை பின்பற்றும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)