PM Modi Gift: உலகத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமரின் G20 பரிசுகள்

PM Modi Gifts: பாலியில் சர்வதேச தலைவர்களை சந்தித்த பிரதமர் அவர்களுக்கு அன்புப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.

உலகத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமரின் பரிசுகள் இந்தியாவின் சார்பில்...

1 /6

இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பரிசாக வழங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. ராதாகிருஷ்ணரின் சிருங்காரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

2 /6

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, குஜராத்தின் கைத்தறி படைப்பான ``மாதா நி பச்சேடி'' என்ற பிரபலமான ஜவுளி பரிசைக் கொடுத்தார் பிரதமர் மோடி

3 /6

குஜராத்தின் கட்ச் கிண்ணத்தை ஜெர்மன் அதிபரிடம் மோடி வழங்கினார். இந்த கிண்ணம் ராஜ்பிப்லா மற்றும் ரத்தன்பூர் ஆற்றுப்படுகைகளில் காணப்படும் ஒரு வகை கல்லால் உருவாக்கப்பட்டது.

4 /6

ஆஸ்திரேலிய பிரதமருக்கு குதிரை ஓவியப் படைப்பு பரிசு. குஜராத்தில் உள்ள சோட்டா உதய்பூரின் ரத்வா கலைஞர்கள் இந்தக் கலைப் படைப்பை உருவாக்குகிறார்கள். ஆஸ்திரேலியா பிரதமருக்கு மோடி ஏன் இந்த பரிசை வழங்கினார்? இது ஆஸ்திரேலிய பழங்குடியினரின் பழமையான புள்ளி ஓவியங்களைப் போன்றது.

5 /6

இத்தாலி பிரதமருக்கு, படன் படோலா துப்பட்டாவை பரிசாக வழங்கினார் மோடி. இது, குஜராத்தின் பிரத்யேக சால்வை

6 /6

இந்தோனேசியா அதிபருக்கு, ஒரு கிண்ணம், சால்வை என இரு பரிசுகளை பிரதமர் வழங்கினார்.