மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, காது இல்லாமலும் மாஸ்க் உண்டு!! அசத்தும் பெண்…வைரலாகும் படங்கள்!!

முகக்கவசங்கள் இந்த கொரோனா காலத்தில் நமது மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாகும். மற்றவரிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க இது நமக்கு உதவுகிறது. எனினும் நம்மில் பலர் சாக்கு போக்குகளை சொல்லி இதை அணியாமல் சுற்றி வருகிறோம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறுவார்கள். ஒரு காது இல்லாவிட்டாலும் மாஸ்க் உண்டு என்று கூறி ஒரு பெண் உலகுக்கு முக்கக்கவசங்களின் முக்கியத்துவத்தை புரிய வைத்து வருகிறார். 

1 /5

நம்மையும் நமது சுற்றத்தில் உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பது நம் மனதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நம்மால் எந்த தடையையும் நாம் தகர்த்து எறியலாம். அதற்கு இந்த பெண்ணே ஒரு உதாரணம். ஒரு காது இல்லாத நிலையிலும் அவர் முகக்கவசம் அணிய வழியைத் தேடி விட்டார். (Photo: Twitter)

2 /5

இவர்தான் Rhys Yarbough. இவருக்கு வயது 20. Goldenhar Syndrone எனப்படும் ஒரு Craniofacial Condition காரணமாக, இவருக்கு ஒரு காது இல்லை. அவரால் வலது பக்கத்தில் எதையும் கேட்க முடியாது. (Photo: Twitter)

3 /5

தான் முகக்கவசம் அணியும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். முதலில் அவர் பாப் சாக்கெட்டை அணிந்து கொள்கிறார். பிறகு முகக்கவசத்தை அணிந்து கொள்கிறார். (Photo: Twitter)

4 /5

இந்த பெண் செயற்கை காதுகளை செய்து வைத்துள்ள போதிலும், அதை அவர் அதிக நேரம் அணிவதில்லை. ஆகையால் பாப் சாக்கெட் பயன்படுத்துவதில் அவர் ஆர்வம் காட்டினார். (Photo: Twitter)

5 /5

ஒரு காது இல்லாத நிலையிலும், இந்தப் பெண் அதற்கான வழியை யோசித்து முகக்கவசத்தை அணிகிறார் என்றால், நம்மால் ஏன் முடியாது? (Photo: Twitter)