Employees Salary Hike Latest News: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாத சம்பளம் ரூ.3000 உயரும்.
Government Employees Salary Hike: மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. மாதச் சம்பளம் ரூ.3,000 அதிகரிப்பு. ஒப்பந்த ஊழியர்களின் சம்பளமும் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பள உயர்வு எந்த வகையை சார்ந்த அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மற்றும் இந்த சம்பளம் உயர்வு எந்த மாநிலத்தைச் சார்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.
இந்த சம்பள உயர்வு மூலம் மாநில அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ.3000 அதிகரிக்கும். அதேநேரத்தில் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் ரூ.15000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பள உயர்வு காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் ஒரு ஆண்டுக்கு ரூ.36000 கூடுதலாக கிடைக்கும். அதாவது மாத சம்பளம் அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 3000 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டு மாநில அரசு ஊழியர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும் மற்றும் இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த நல்ல செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பள உயர்வு என்பது ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தும். இஎஸ்ஐ (ESI) திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் குரூப் டி (Group D) ஊழியர்கள் மாதம் ரூ.12000 என சம்பளம் பெற்று வந்தனர். தற்போது அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.3000 அதிகரிக்கப்பட்டு இருப்பதால், குரூப் டி (Group D) ஊழியர்களுடைய மாத சம்பளம் ரூ.15000 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பள உயர்வு என்பது நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக மாநில அரசின் இந்த முடிவு ஒப்பந்த ஊழியர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
2013 ஆம் ஆண்டில், மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, குரூப் சி மற்றும் குரூப் டி ஆகிய பிரிவுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். தற்போது அவர்களின் சம்பளம் உயரும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக மாநில அரசு 299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டின் இறுதியில் மேற்கு வங்க மாநில மம்தா அரசு இந்த நல்ல செய்தியை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பள உயர்வு செய்தியின் காரணமாக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.